அமெரிக்க ஜனாதிபதியின் அங்கீகாரம் பெற்ற வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கத்திற்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு.

20 January 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள், தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்கள் நலப் பணிகளில் நற்பணி இயக்கத்தினரை ஈடுபடுத்தி வருகிறார்.

ரத்த தானம், உடல் தானம், பேரிடர்கால உதவிகள் என பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் நற்பணி இயக்கத்தாருக்கும், தலைவரின் தொலைநோக்குப் பார்வைக்கும் தற்போது சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் "தன்னார்வலர் விருது” வழங்கும் அமைப்பின் உறுப்பினராக @khwelfarena ''வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கத்திற்கு'' அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வட அமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தினருக்கு, தலைவர் திரு. கமல் ஹாசன்அவர்களின் சார்பிலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பிலும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1881321279304986876

Facebook: https://www.facebook.com/share/p/14gHCm7PrZ/

Instagram: https://www.instagram.com/p/DFDDzmCJYI3/?igsh=M2t0eDl1bDhxaHQ2

Recent video







Share this post