தமிழக அரசு நடத்திய சமத்துவ நாள் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் பங்கேற்பு!

15 April 2025

தமிழக அரசு நடத்திய சமத்துவ நாள் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் பங்கேற்பு!

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் சமத்துவ நாள் விழா ஏப். 14-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று, தமிழகமெங்கும் பள்ளிக் கட்டிடங்கள், மாணவர்களுக்கான விடுதிகள், சமுதாயக் கூடங்கள், கற்பித்தல் அறைகள், பழங்குடியினருக்கான 1,000 வீடுகள் உள்ளிட்டவற்றைத் காணொலி வாயிலாகத் திறந்துவைத்து, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இந்த விழாவில் மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு சென்னை மேயர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், அரசுத் துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, கட்சியின் சார்பில் துணைத் தலைவர் திரு. A.G.மெளரியா (IPS) Retd அவர்களும் மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மேலும், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1912033492743143529

Facebook: https://www.facebook.com/share/p/18zAnyCTHm/

Instagram: https://www.instagram.com/p/DIdR_E6JZ8Z/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post