மக்கள் நீதி மய்யம் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, கட்சியின் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நற்பணி அணி மதுரை மண்டல அமைப்பளர் திரு. ஜெ.சிவபாலகுரு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர் திரு. திருமூர்த்தி, நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. S.செல்வகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் திரு. குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மண்டலச் செயலாளர் திரு. M.அழகர் எழுச்சி உரையாற்றினார்.
கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. மனோதீபன், மாவட்ட துணைச் செயலாளர் திரு. லட்சுமி சுந்தரம், மாவட்டப் பொறுப்பாளர் திரு. சிவாஹாசன், திரு. கோபிஹாசன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் திரு. வெங்கடேசன், திரு. விக்னேஷ் கமல், திரு. செந்தில் பழனி, மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. சமேஸ்வரி, சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. மணிகண்டன், நகர அமைப்பாளர்கள் திரு. மணி, திருமதி. சியாமளா, திண்டுக்கல் நகர, ஒன்றிய நிர்வாகிககள் திரு. கமல் ராமசாமி, திரு. கோட்டை ஆதவன், திரு. ஆட்டோ சலீம், திரு. சுரேஷ், திரு. ராஜபாண்டி, திரு. பால்பாண்டி, திரு. பீர்சேட் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நற்பணி இயக்க மாநகர அமைப்பாளர் திரு. சலீம் சேட் நன்றி கூறினார்.
இந்தக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்தல், மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள், செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1918559387750179319
Facebook: https://www.facebook.com/share/p/18ppvXpF8X/
Instagram: https://www.instagram.com/p/DJLpoPWoaIT/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==