மக்கள் நீதி மய்யம் சார்பில் அம்பத்தூரில் கட்சி கொடியேற்று விழா, உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர், பழச்சாறு, தர்பூசணி விநியோகம்.

13 May 2025

மக்கள் நீதி மய்யம் சார்பில் அம்பத்தூரில் கட்சி கொடியேற்று விழா, உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர், பழச்சாறு, தர்பூசணி விநியோகம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் ஆலோசனையின்படி, அம்பத்தூர் மநீம மாவட்டச் செயலாளர் திரு. தனபாலன் அவர்களின் தலைமையில், வட்ட செயலாளர்கள் திரு. நவசேகர் அவர்களின் ஏற்பாட்டில், சென்னை மாநகராட்சி 86வது வார்டில் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் கட்சி கொடியேற்றி வைத்தார். 

கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா, சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன் ஆகியோர், பொது மக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் பழங்களும், பள்ளி மாணாக்கர்களுக்கு பள்ளி உபகரணங்களையும் வழங்கினர்.

தொடர்ந்து 90வது வார்டு வட்டச் செயலாளர் திரு. சரவணன் அவர்களின் மனைவி திருமதி. அக்தரி பேகம் அவர்கள் நிரந்தர தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

நிகழ்வில் பொறியாளர் அணி மண்டல செயலாளர் திரு. சரவணன், மாவட்டச் செயலாளர்கள் திரு. மாறன், திரு. கோமகன் திரு. நிழவலகன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. சாந்தி பாய், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சாம் டேவிட், நற்பணி அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. ரவி, நகர செயலாளர் திரு. சந்திரசேகர், நற்பணி அணி நகர அமைப்பாளர் திரு. கமல் குமார், திரு. ராஜா, திரு. ராஜேஷ், திரு. சரவணன், திரு. உமாசங்கர், உறுப்பினர்கள் திரு. முருகன், திரு. ராமன், திரு. லட்சுமணன், திரு. அமரேஷ், திரு. பாபு, திரு. தணிகாசலம் , திரு. இளங்கோ, திரு. சிவகுமார், திரு. செந்தில் , செல்வி. ரேணுகா தேவி,செல்வி. உஷா ராணி, செல்வி. சந்தான லட்சுமி,திருமதி. சரஸ்வதி, திருமதி. நிவேதா, திருமதி. சந்தியா, திருமதி. மகா, நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில நிர்வாகிகள் திரு. மாடசாமி, திருமதி. பானுமதி, திரு. துரைசங்கர், திரு. யுவராஜ், திரு. லெனின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1922155844109779322

Facebook: https://www.facebook.com/share/p/1FoJHSZt1A/

Instagram: https://www.instagram.com/p/DJlNIuKJFNm/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post