மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சந்திப்பு.

30 May 2025

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் இன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். 

வருகிற ஜூன் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 

இந்தச் சந்திப்பின்போது மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் திரு. துரைமுருகன் அவர்கள், திரு. எ.வ.வேலு அவர்கள், திரு. பி.கே.சேகர் பாபு அவர்கள், திமுக கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள், திமுக செய்தித்துறைத் தலைவர் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள், தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் திரு. பூச்சி எஸ்.முருகன், 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்களான திரு. ஏ.ஜி.மெளரியா அவர்கள், திரு. ஆர்.தங்கவேலு அவர்கள், பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு. முரளி அப்பாஸ் அவர்கள் மற்றும் திரு. மூர்த்தி அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1928394208131576089

Facebook: https://www.facebook.com/share/p/18zCAKvyfF/

Instagram: https://www.instagram.com/p/DKRiyTbJ1eM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post