மக்கள் நீதி மய்யம் சார்பில் திரு.வி.க. நகர் தொகுதியில் கொடியேற்றம், உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர், பழச்சாறு, தர்பூசணி விநியோகம்.

20 May 2025

மக்கள் நீதி மய்யம் சார்பில் திரு.வி.க. நகர் தொகுதியில் கொடியேற்றம், உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர், பழச்சாறு, தர்பூசணி விநியோகம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் தலைமையில், மாவட்டத் துணை செயலாளர் M.சின்னதுரை ஏற்பாட்டில், பொது மக்களுக்கு நீர்மோர், இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. 

பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர். வைத்தீஸ்வரன் அவர்கள் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 15-க்கும் மேற்பட்டோர் புதிய உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். 

நிகழ்வில் பொறியாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சரவணகுமார், தலைமை நிலைய பேச்சாளர் திரு. பாலமுருகன், மாவட்ட பொருளாளர் V.ஆனந்த், நற்பணி அணி மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. மாறன், நகர செயலாளர் திரு. M.A.வேலா, வட்டச் செயலாளர்கள் திரு. M.K.P.சக்திவேல், திரு. N.பிரபா, திரு. K.N.பிரசாந்த், திரு. A.மஜித், திரு. V.P.K.கார்த்திக், திரு. N.V.சீனிவாசன், திரு. M.சண்முகம், திரு. J.பிரேம், நற்பணி அணி திரு. ஜீவா , சமூக ஊடக அணி நகர அமைப்பாளர் திரு. ஜோசி, கிளை செயலாளர்கள் திரு. K.துரைராஜ், திரு. M.பாலா. திரு. செல்வபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1924806470031589803

Facebook: https://www.facebook.com/share/p/18wqY2h5zg/

Instagram: https://www.instagram.com/p/DJ4CgsrJt-j/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post