சைதாப்பேட்டையில் பொதுமக்களுக்குநலத்திட்ட உதவிகள் வழங்கிய மநீம கட்சியினர்.

26 November 2024

                `

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சைதாப்பேட்டையில் கட்சிக் கொடியேற்று விழா மற்றும் 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் திரு. J.கதிர் அவர்கள் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (retd) அவர்கள் கட்சிக் கொடியேற்றிவைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில், கட்சியின் தலைமை நிலைய மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன், சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் தணிகைவேலு, வழக்கறிஞர் அணி மண்டல அமைப்பாளர் திரு. சேகர், மாணவரணி மண்டல அமைப்பாளர் திரு. சந்துரு, மாவட்ட பொருளாளர் திரு. சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் திரு.கோவிந்தராஜுலு, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு.ரமேஷ் கண்ணன், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. N.குமார், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சந்தர், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. சுபாஷினி, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் திரு. சரத்குமார், மாநகரச் செயலாளர்கள் திரு.லத்தீப் ஹாசன், திரு.விஜயகுமார், திரு. ஜான் சாலமன், மகளிர் அணி மாநகர அமைப்பாளர் திருமதி. சித்ரா, வட்டச் செயலாளர்கள் திரு.முரளிதரன், திரு.முத்துக்குமரன், திரு.மடுவை சங்கர், இளைஞர் அணி வட்ட அமைப்பாளர் திரு.கண்ணன், கிளைச் செயலாளர்கள் திரு.அன்பு நேசன், திரு.சோமு, திரு.குணசேகரன், திரு.வீரராகவன், நிர்வாகிகள் திரு.சிவா, திரு.மோகன், திரு.சின்னையா, திரு.ராஜன், திரு.தாஸ், திரு.பிரான்சிஸ், திரு.வெங்கடேசன், திரு.சிவக்குமார், திருமதி.பத்மாவதி மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, மாநிலத் துணைத் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது, புதிய பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1861361115520999779

Facebook: https://www.facebook.com/share/p/15dqNknnHy/

Instagram: https://www.instagram.com/p/DC1O5_BpYLC/?utm_source=ig_web_copy_link 


Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post