பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். மக்கள் நீதி மய்யம் மாணவர் அணி நிர்வாகிகள் பங்கேற்பு.

10 January 2025

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய விதிமுறைகள் என்ற பெயரில் கல்வி உரிமைகளையும், சமூக நீதியையும் அழிக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO - TN) சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவரும், திமுக மாணவர் அணி மாநிலச் செயலாளரும், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. எழிலரசன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன் கலந்து கொண்டார். 

சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சந்துரு, பூந்தமல்லி மாவட்ட அமைப்பாளர் திரு. அப்ரோஸ், சைதாப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் திரு. சரத்குமார், பெரம்பூர் மாவட்ட அமைப்பாளர் திரு. ஃபைஸ் முகமது மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் திரு. பார்த்திபன், திரு. வெற்றிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1877694008656642362

Facebook: https://www.facebook.com/share/p/18bee1yPmN/

Instagram: https://www.instagram.com/p/DEpSQU0vYbJ/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post