வேளச்சேரி மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

8 April 2025

வேளச்சேரி மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, வேளச்சேரி மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்கள் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வேளச்சேரி மாவட்டச் செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் செய்திருந்தார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், புதிய நிர்வாகிகள் நியமனம், கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில், மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. பத்மா, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் திரு. கார்த்திகேயன், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. பிரசாத் குமார், நகரச் செயலாளர்கள் திரு. முகிலன், திருமதி. ஸ்ரீதேவி, திரு. சுரேஷ், திரு. அருண் சுரேஷ், வட்டச் செயலாளர்கள் திரு. சசிகுமார், திரு. லோகநாதன், திரு. பிரபாகர், திரு. சுரேஷ் ஜோதி, திரு. ஹரிஷ் ஜோதி, திரு. சரவணன், திரு. அசோக், கிளைச் செயலாளர்கள் திருமதி. உமா மகேஸ்வரி, திருமதி. பச்சையம்மாள், திருமதி. நந்தினி, திருமதி. கண்மணி, திருமதி. அமுதா, திரு. மோதிலால், திரு. சிவா, திரு. சந்தோஷ்குமார், திரு. தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1909518656385524077

Facebook: https://www.facebook.com/share/p/1AGA1P88uJ/

Instagram: https://www.instagram.com/p/DILaRW5J5wV/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post