மக்கள் நீதி மய்யம் கோவை சிங்காநல்லூர் தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா!

9 March 2025

மக்கள் நீதி மய்யம் கோவை சிங்காநல்லூர் தலைமை அலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள், மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் சிறப்புரையாற்ற, மாவட்டச் செயலாளர் திரு. மயில் கே. கணேஷ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதீன் மற்றும் மாவட்டச் செயலாளர் திரு. வரதராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் திருமதி. மணிமொழி, மகளிர் அணி வட்ட அமைப்பாளர் திருமதி. சுலோச்சனா, வட்டச் செயலாளர் திருமதி. உஷாலட்சுமி, சமூக ஊடக அணி மாநகர அமைப்பாளர் செல்வி. நித்யா ஸ்ரீ, மற்றும் திருமதி. இந்துமதி, செல்வி. தக்‌ஷா ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

மூத்த நிர்வாகி திரு. ராதா கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் திரு. சுகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. தனபால், மாநகர செயலாளர்கள் திரு. ரகுபதி, திரு. முருகன், மாநகரப் பொருளாளர் திரு. சிவசண்முகம், வட்ட செயலாளர்கள் திரு. அருண் பூபதி, திரு. சண்முகம், இளைஞர் அணி அமைப்பாளர் திரு. தாமோதரன், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. ரவி சங்கர், மாவட்ட துணை அமைப்பாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்ட இந்த நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளர் Dr.சௌந்தர்ராஜன் நன்றி கூறினார்.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1898736884387582442

Facebook: https://www.facebook.com/share/p/19bgPcRUhZ/

Instagram: https://www.instagram.com/p/DG-zbO1JwrF/?utm_source=ig_web_copy_link




Recent video







Share this post