மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்.

2 May 2025

மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, கட்சியின் மகளிரணி சார்பில் மதுரை அருள்தாஸ்புரம் தண்ணீர் தொட்டி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பூத் கமிட்டி முகவர்களுக்கான தேர்வு சிறப்பாக நடைபெற்றது.

மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. மணிமேகலை அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாநிலச் செயலாளர் திருமதி. பத்மா ரவிச்சந்திரன் (மதுரை, நெல்லை மண்டலங்கள்), மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி. பெ.கலையரசி, மாவட்ட நிர்வாகிகள் திருமதி. சிலம்பரசி, திருமதி. போதும் பொண்ணு, திருமதி. சுகுணா, திருமதி. உமாராணி, கட்சி நிர்வாகிகள் திரு. ராஜா, திரு. சாரதி, திருமதி. லீலா, திருமதி. செல்வி, திருமதி. ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த முகாமில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பூத் கமிட்டி முகவர்கள் தேர்வு, கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டுசெல்லுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1918187523538592225

Facebook: https://www.facebook.com/share/p/1EYBWmbsrD/

Instagram: https://www.instagram.com/p/DJJBf2FpplK/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post