மக்கள் நீதி மய்யம் 8-வது ஆண்டு தொடக்க விழா, மதுரையில் கோலாகல கொண்டாட்டம்.

24 February 2025

மக்கள் நீதி மய்யம் 8-வது ஆண்டு தொடக்க விழா, மதுரையில் கோலாகல கொண்டாட்டம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. முத்துகிருஷ்ணன் அவர்களது தலைமையில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மதுரை மாநகராட்சி 73-வது வார்டு முத்துப்பட்டி, 72-வது வார்டு பைக்கரா, 71-வது வார்டு பழங்காநத்தம், 70-வது வார்டு, 67-வது வார்டு விராட்பத்து, 63, 62- வது வார்டுகளுக்கு உட்பட்ட பெத்தானியாபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்டச் செயலாளர் திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. சரவணன், திரு. பாஸ்கரன், நகரச் செயலாளர்கள் திரு.கணேசன், திரு. ஆறுமுகம், திரு. இளங்கோவன், திரு. செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிகளில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. நாகமணி, மாவட்ட துணை அமைப்பாளர் திரு. ராஜ்குமார், வட்டச் செயலாளர்கள் திரு. சுரேஷ், திரு. கருப்பசாமி, திரு. கோபிநாத், திரு. ஆராண், திரு. தெய்வம், திரு. செந்தில்ஹாசன், வட்டப் பொருளாளர் திரு. அழகர்சாமி, திரு. பரமேஸ்வரன், மற்றும் நிர்வாகிகள் திரு. கமல் பாபு, திரு. ஜெயபால், திரு. முருகன், திரு. தெய்வேந்திரன், திரு. சொர்க்கம் ராஜா, திரு. வக்கீல் சுந்தர், திரு. பரதன், திரு. முனியசாமி, திரு. மணவாளன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#MNM8THYEAR
#மநீம8ம்ஆண்டு

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1894000122411078141

Facebook: https://www.facebook.com/share/p/1A6gBh2wbo/

Instagram: https://www.instagram.com/p/DGdJYw5pkYy/?utm_source=ig_web_copy_link

Recent video







Share this post