நம்மவர் தொழிற்சங்கப் பேரவை தலைமையில், தமிழ்நாடு பசுமை ஓட்டுநர் சங்கம் - தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்.

26 August 2024

மக்கள் நீதி மய்யம், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் தலைமையில், தமிழ்நாடு பசுமை ஓட்டுநர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்கம் சார்பில், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு சீருடை, கல்வி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீர விளையாட்டான சிலம்பம், சுருள்வாள் சுற்றுதல், பொதுச் சேவை செய்பவர்களை கௌரவிக்கும் வகையில் `நம்மவர் விருது 2024' வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகள் நேற்று (25-08-2024) நடைபெற்றன. 

நிகழ்வில், மக்கள் நீதி மய்யம், நற்பணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜி.நாகராஜன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திரு. செல்லப்பாண்டி,
பசுமை தொழிற்சங்கத் தலைவர் திரு. எம்.கே.ராஜன், செயலாளர் திரு. மாணிக்கராஜ், பொருளாளர் திரு. அய்யப்பன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சொக்கர், பேரவை மாநிலப் பொதுச் செயலாளர் திரு. ரவிச்சந்திரன், பொருளாளர் திருமதி. பானுமதி, பேரவை நிர்வாகிகள் திரு. மாடசாமி, திரு குணசேகரன், திரு. ரவிச்சந்திரன், திரு. சுதன், திரு. சரவணன், திரு. ராஜு, திரு. யுவராஜ் கார்த்திகேயன், திரு.லெனின், திரு. ரமேஷ், திரு. அருண், திரு.ஜெகன், மநீம தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு. ஜவகர், துணைச் செயலாளர் திரு. அக்பர், நகரச் செயலாளர் திரு. J.L ராஜா மற்றும் மய்ய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1828028873105363078

Facebook: https://www.facebook.com/share/p/o97K6vQJgAeRwa8t/

Instagram: https://www.instagram.com/p/C_IaIffPblZ/?igsh=MXdjaHRodDVxank0bw==

Recent video







Share this post