வாய்க்கால் சீரமைப்பு, கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு வழங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

19 February 2025

வாய்க்கால் சீரமைப்பு, கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு வழங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

மதுரை மாடக்குளம் கண்மாயில் இருந்து முத்துப்பட்டி கண்மாய்க்குச் செல்லும் வரத்து வாய்க்கால்களில் தேங்கியிருக்கும் கழிவுநீர் மற்றும் குப்பைகளையும் அகற்றி, அப்பகுதியை தூய்மைபடுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கினர். 

மக்கள் நீதி மய்யம் சார்பில் திருமதி. கலையரசி அவர்களின் முன்னெடுப்பில், மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. முத்துகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், நற்பணி அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திரு. செல்லப்பாண்டி, மகளிர் அணி மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி. பத்மா ரவிச்சந்திரன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. செல்வி மற்றும் நிர்வாகி திருமதி. சுகுணா உள்ளிட்டோர், நீர்வளத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1892169230105432462

Facebook: https://www.facebook.com/share/p/14AHrvZmcm/

Instagram: https://www.instagram.com/p/DGQIztaJG1K/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post