சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில், மநீம பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் பங்கேற்று தலைவரின் வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டார்.

2 February 2026

சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில்,

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு விழாப்பேருரையாற்றினார்.

மேலும் நிகழ்வில் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன், அனைத்து தோழமை கட்சித்தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் பங்கேற்று தலைவரின் வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டதுடன், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உரிமைகளுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தி, உழைக்கும் மக்களைச் சுரண்டுவோரை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருவது பாராட்டத்தக்கது. தற்போது அனைத்துத் துறைகளிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கும் திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்துத் தரப்பினருக்குமான நலத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், மக்களை திசை திருப்ப மதவாத சக்திகள் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருக்கின்றன. அந்த சதிகளை திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிகரமாக முறியடிக்கும்" என்று பேசினார்.

நிகழ்வில் பொதுச் செயலாளருடன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாணவரணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், மகளிரணி மாநிலச் செயலாளர் (சென்னை, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மண்டலங்கள்) திருமதி. சினேகா மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#KamalHaasan 
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2018297797175558640?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1C8gjHeE3u/

Instagram: https://www.instagram.com/p/DUQVESzCXfo/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post