திரைப்படம் மற்றும் நாடக எழுத்தாளரும், நடிகருமான மறைந்த திரு. கிரேஸி மோகன் அவர்கள் எழுதி, நடித்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாடகம் “சிரி சிரி கிரேஸி”. இந்த நாடகத்தை அல்லயன்ஸ் பதிப்பகம் இப்போது புத்தகமாக வெளியிடுகிறது.
இன்று (01.11.2025) தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்கள் "சிரி சிரி Crazy" புத்தகத்தினை வெளியிட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, நமது தலைவருமான திரு. கமல்ஹாசன் @ikamalhaasan அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் திரு. மாது பாலாஜி, திரு. ரவி அப்பாசாமி, இயக்குநர் திரு.எஸ்.பி. காந்தன், பதிப்பாளர் திரு. அல்லயன்ஸ் சீனிவாசன், திரு. பிரசாந்த் சீனிவாசன், திரு. துக்ளக் இதயா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1984559106590675013
Facebook: https://www.facebook.com/share/p/17f3oNgR2Y/
Instagram: https://www.instagram.com/p/DQgm28HCX9X/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==