VIT சென்னை கிரிஸ்டல் கனெக்ஷன்ஸ் Alumni Meet 2025-இல் கலந்து கொண்டார் தலைவர் திரு. கமல் ஹாசன்.

15 August 2025

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள், வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி (VIT) சென்னை வளாகத்தில் இன்று (15.08.2025) நடைபெற்ற கிரிஸ்டல் கனெக்ஷன்ஸ் – 15ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (Alumni Meet) விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில் சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு ‘Alumni Excellence Awards’ வழங்கப்பட்டதுடன். கல்வி, தொழில், தொழில்முனைவு, சமூக முன்னேற்றம், மற்றும் 30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்பட்டன.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், கல்வியின் முக்கியத்துவம், புதுமை உருவாக்கும் திறன், சமூகப் பொறுப்பு மற்றும் இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் வகிக்கும் பங்கு குறித்து மாணவர்களிடம் ஊக்கமூட்டும் வகையில் உரையாற்றினார். இளம் தலைமுறை உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும், கனவுகளை செயலாக்கும் துணிச்சலுடன் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#VITChennai

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1956382529260265830

Facebook: https://www.facebook.com/share/p/1ArUJe4Wha/

Instagram: https://www.instagram.com/p/DNYZi4ZI-P1/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post