நம்மவர் தொழிற்சங்கப் பேரவை சார்பில் சென்னையில் மே தினக் கொடியேற்று விழா.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, உழைப்பாளர் தினத்தையொட்டி நம்மவர் தொழிற்சங்கப் பேரவை சார்பில் மே தினக் கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர், பழச்சாறு, தர்பூசணி வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R. சொக்கர் அவர்கள் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் திரு. V.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் தொழிற்சங்கப் பேரவைக் கொடியேற்றி வைத்தார். கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா (IPS Retd.) அவர்கள் மற்றும் நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன் ஆகியோர், பொதுமக்களுக்கு நீர் மோர், பழச்சாறு, தர்பூசணி மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வைத் தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொருளாளர் திருமதி M.பானுமதி, மாநில துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. K.மாடசாமி, திரு. P.குணசேகரன், திரு. B.மாணிக்கராஜ், திரு. G.ரவிசந்திரன், திருமதி. A.பானுமதி, திரு. A. மெல்கியா சுதன், மாநில துணைச் செயலாளர்கள் திரு. A.ராஜு, திரு. M.K.ராஜன், திரு. M.புகழ்முருகன், திருமதி. S.சாந்தி, திரு. D.துரை சங்கர், திரு. V.யுவராஜ், திரு. R.கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. V.லெனின், திரு. S.சுப்பிரமணியன், திரு. R.ஜெகன், திரு. S.ரமேஷ், திரு. C.அருண், திரு. T.பிரசாந்த்,
கட்சியின் மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. அர்ஜுனர், திரு. லக்ஷ்மன், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், மய்யம் ஐ.சி.எப் தொழிற்சங்க செயலாளர் திரு. வெங்கடேஷன், மநீம நகைத் தொழிலாளர் நலச்சங்க தலைவர் திரு. சேகர், நம்மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் பொதுச் செயலாளர் திரு. P.S.சரவணன், ராஜலட்சுமி அம்மையார் மய்யம் மகளிர் தொழிற்சங்க தலைவி திருமதி. சங்கீதா மற்றும் கட்சியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#NTSP
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1917894757688508899
Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid0gDdtUDSJDSS2P8hXN29XRhxX
DM6tUJh6dW7TYoygzgDgrAUCJy3YvHK9vB1bp2jol
Instagram: https://www.instagram.com/p/DJG7OrAJEpb/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==