நம்மவரை சந்தித்த, இந்திய தேசிய காங்கிரஸ்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சசிகாந்த் செந்தில்.

12 June 2024

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு.சசிகாந்த் செந்தில் அவர்கள், நம்மவர் அலுவலகத்தில் இன்று (12.06.2024) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது இருவரும் சமகால அரசியல் மற்றும் தற்போதைய சமூகச்சூழல் குறித்து கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரு.ஏ.ஜி.சிதம்பரம், திரு.இனாமுல் ஹசன், திரு.பாபு மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு.ஏ.ஜி.மௌரியா IPS (Rtd), பொதுச் செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் M.A., B.L. ஆகியோர் உடனிருந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#INC

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1800796515960865206

Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid0JPVTe4LQVgDKLF6EyZxqBZdd8dJkApL5P8PAMNp2HGUperRb1Re3rEDz9j1tGU3Ml

Instagram: https://www.instagram.com/p/C8G5ScYpDPv/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post