சிங்காநல்லூர் மக்கள் நீதி மய்யம் சார்பில் பயிற்சி பட்டறை மற்றும் பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.

31 March 2025

சிங்காநல்லூர் மக்கள் நீதி மய்யம் சார்பில் பயிற்சி பட்டறை மற்றும் பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, சிங்காநல்லூர் மாவட்டம் சார்பாக சமூக ஊடகம் சார்ந்த பயிற்சி பட்டறை சிறப்பாக நடைபெற்றது. கட்சியின் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் தலைமையில், மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் முன்னிலையில், பயிற்சி பட்டறை அணி மண்டல அமைப்பாளர் திரு. ஶ்ரீதர் அவர்கள் ஒருங்கிணைத்த இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் திரு. மயில் K.கணேஷ் அவர்கள் செய்திருந்தார்.

ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மண்டல அமைப்பாளர் திரு. செவ்வேள், மற்றும் மாவட்ட, மாநகர, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதீன் அவர்கள் சமூக ஊடகங்களில் சிறப்பாகச் செயல்படுவது குறித்து பல்வேறு பயிற்சிகள் அளித்தார்.

மேலும், பூத் கமிட்டி உறுப்பினர் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. 

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1906622680624951650

Facebook: https://www.facebook.com/share/p/194RDpWZz3/

Instagram: https://www.instagram.com/p/DH21fSeJ9P_/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==


Recent video







Share this post