கோவையில் நடந்த முப்பெரும் விழாவில் நம் துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா IPS (Rtd) அவர்களின் உரை.

16 June 2024

கோவையில் நடந்த முப்பெரும் விழாவில் நம் துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா IPS (Rtd) அவர்களின் உரை :

கலைஞர் நூற்றாண்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல், 40க்கு 40 வெற்றி பெற்ற முதல்வருக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள, தனக்கு வாய்ப்பு அளித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் அவர்களுக்கும், கூட்டணித் தலைவர் முதல்வர் அவர்களுக்கும் தன்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த வெற்றிக்கு ஒரே காரணம் ஒற்றுமை மட்டும்தான். சொந்த ஆதாயங்களை தேடாமல், விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக இந்தச் சாதனையை படைத்துள்ளோம். நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானவர்களுக்கு நமது ஒற்றுமைதான் பதிலடியாக இருக்கும். 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்காகவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும், எந்த இந்தியப் பிரபலங்களுக்கும் இல்லாத துணிச்சலுடன், பாசிசத்தை எதிர்த்து, டெல்லியில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார். 

அத்துடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளர் மிகப் பெரிய வெற்றி பெற வழி வகுத்தார். 

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக ஒரு மாதத்திற்கும் மேல் சுற்றுப்பயணம் செய்து தீவிர பரப்புரை செய்து வாக்கு சேகரித்தார். 

தன்னலமற்ற இந்த முடிவை எடுத்த தலைவரை பாராட்டுவதோடு மட்டுமில்லாமல் அவர் வழியில் தொடர்ந்து பயணிப்பதை உறுதி செய்வோம் என்று பேசினார்.

மேலும் இந்நிகழ்வில் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்களும் கலந்து கொண்டார். 

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam 
#DMK

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1802335405511262219?t=J6O6N8jgOGJUyOufqsYwQg&s=19

Facebook: https://www.facebook.com/share/p/YcN6m6qaZFeBn4DC/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C8R1c-YP06k/?igsh=MTRrMW9sN3huODdjeA==

Recent video







Share this post