கமல் பண்பாட்டு மையத்திற்கு நிலத்தை நன்கொடையாக அளிப்பது குறித்து தலைவர் அவர்களிடம் உறுதியளித்த, மாநில, மண்டல செயலாளர்கள்.

23 July 2025

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், விவசாய அணியின் மாநிலச் செயலாளர் திரு. மயில்சாமி மற்றும் சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது, திரு. மயில்சாமி அவர்கள், விவசாய அணியின் சார்பாக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் “கமல் பண்பாட்டு மையம்” முன்னெடுக்க உள்ள மக்கள் நலப்பணிகளுக்குத் தனது நிலத்தை நன்கொடையாக வழங்குவது குறித்து தலைவர் அவர்களிடம் தெரிவித்தார். 

தொடர்ந்து, நம்மவர் படிப்பகங்கள் இளையோர் மேம்பாட்டிற்காக ஆற்றிவரும் பங்களிப்புகளைப் பற்றித் தனது மகிழ்ச்சியைத் தலைவருடன் பகிர்ந்துகொண்ட திரு. மயில்வாகனன் அவர்கள், புதிதாக நம்மவர் படிப்பகம் அமைப்பதற்குத் தேவையான நிலத்தை “கமல் பண்பாட்டு மையத்திற்கு” நன்கொடையாக அளிப்பது குறித்து தலைவர் அவர்களிடம் உறுதியளித்தார்.

நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா, பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1947912792012689753

Facebook: https://www.facebook.com/share/p/16jpRLZkMG/

Instagram: https://www.instagram.com/p/DMcOA-Apm85/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post