தமிழ்நாடு முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் பங்கேற்பு!

1 March 2025

தமிழ்நாடு முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் பங்கேற்பு!

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று (பிப். 28) மாலையில் நடைபெற்றது. 

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமை கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற இவ்விழாவில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் அவர்கள் கலந்துகொண்டு, தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்தி உரையாற்றினார். 

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1895805068638896326

Facebook: https://www.facebook.com/share/p/15wkx1MPUr/

Instagram: https://www.instagram.com/p/DGp-ilmJuKB/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post