மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒருபதியாக கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, கோவை கவுண்டம்பாளையம் மநீம மாவட்ட சார்பில் சுப்பிரமணியம்பாளையம் அரசுப் பள்ளி அருகில், கட்சிக் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
விமரிசையாக நடைபெற்றது.
மாநிலத் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் கட்சிக் கொடியேற்றிவைத்து, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலைகளும், மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தககங்களும் மற்றும் மதிய உணவும் வழங்கினார்.
கட்சிப் பேச்சாளர் திரு. கோபிநாத் வரவேற்ற இந்நிகழ்விற்கு
மாவட்டச் செயலாளர் திரு. P.மனோகரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர்கள் திருமதி பனித்துளி, திருமதி. விஜயா, திரு. அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் நற்பணி அணி மண்டல அமைப்பாளர் திரு. சித்திக், மாவட்டச் செயலாளர்கள் திரு. சிட்கோ சிவா, திரு. மோகன்ராஜ், திரு. தனவேந்திரன், நிர்வாகிகள் திரு. சிராஜுதீன், திரு. விக்டர், திரு. சிக்கந்தர், திரு. பிரசன்னா, திரு. ரசூல் கான், திருமதி லட்சுமி, திரு. ஜெய்கணேஷ், திரு. ரவிசங்கர், திரு. சுந்தர்ராஜ், திரு. சீனிவாசன், திரு. பழனிசாமி, திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. பிரகாஷ், திரு. மோகன், திரு. மகாராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1866049969742069767
Facebook: https://www.facebook.com/share/p/15dtwsLqMi/
Instagram: https://www.instagram.com/p/DDWjJcaJx3J/?utm_source=ig_web_copy_link