முதியோர் இல்லத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மநீம கட்சியினர்…
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை புலியகுளத்தில் உள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் இனிப்பு, இரவு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. தங்கவேல் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திரு. பிரபு, மாநகரச் செயலாளர் திரு. மணிக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர்கள் திரு. ஜெயசுதன், திரு. விக்டர் டேவிட், திரு. ஜெய்கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்வில், நற்பணி இயக்க மண்டல அமைப்பாளர் திரு. P.I.சித்திக், மநீம மாவட்ட துணைச் செயலாளர் திரு.சத்தியநாராயணன், மாநகரச் செயலாளர் திரு. சிராஜுதீன், மாநகரப் பொருளாளர் திரு. சிவசண்முகம், நற்பணி இயக்க நிர்வாகிகள் திரு. மோகன், திரு. கலாநிதி, மகளிரணி நிர்வாகி திருமதி உமாமகேஸ்வரி, இளைஞரணி நிர்வாகி திரு. கார்த்தி, திரு. ஆனந்தராஜ், புலியகுளம் திரு. ஆனந்த், திரு. சுரேன், திரு. ராஜ்கமல், திரு. ரவி, திரு. நாகராஜ், திரு. சின்னதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1863922015251595273
Instagram: https://www.instagram.com/p/DDHbYr3PkWy/?utm_source=ig_web_copy_link