தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

11 September 2024

பல்வேறு வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து `தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக இருந்த திரு. த.வெள்ளையன் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.

தமிழ்நாட்டு வணிகர்களைப் பாதுகாப்பதும், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதுமே தனது வாழ்நாள் பணி என்று வாழ்ந்தவர் திரு. த. வெள்ளையன். அவரது மறைவு வணிகர்களுக்குப் பேரிழப்பு. 

அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், வணிகப் பெருமக்கள் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1833709723176333593?t=1rOkqazHC878x9Xn18C0Dg&s=19


Recent video







Share this post