திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 6 வயதுக் குழந்தை உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.
மருத்துவமனைகளில் இனியும் இதுபோன்ற விபத்துகள் நேரிடாத வகையில் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும், முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதும் அவசியம்.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1867588688911171667?t=kxrsv-uhJsIoCw3r1alPaA&s=08
Facebook: https://www.facebook.com/share/p/1BYTPaupdW/