கல்வியால் தான் ஈட்டிய ஞானத்தை எளியோருக்காகவே பயன்படுத்த வேண்டும் என்கிற மனிதநேயச் செயல்பாட்டைக் கடைசிவரை தொடர்ந்தவர் மருத்துவர் வேணி. 
‘அஞ்சு ரூவா டாக்டர்’ என்று வெகுமக்களால் போற்றிக் கொண்டாடப்பட்ட மருத்துவர் ஜெயச்சந்திரனின் மனைவியான மருத்துவர் வேணி, தானும் தன் கணவரின் பாதையிலேயே பயணம் செய்து அவர் போலவே ஐந்து ரூபாய் கட்டணம் பெற்று ஏழை எளிய மக்களுக்குத் தன்  சேவையைத் தொடர்ந்தவர்.  இன்று அவர்தம் வாழ்வு நிறைவை எய்தியிருக்கிறது. 
தொடர் முயற்சிகளே மனித குலத்தின் ஏற்றம். 
வேணி அம்மா, உங்களால் வாழ்வு பெற்ற - உங்களுக்குப் பிறக்காத - உங்கள் குழந்தைகள் உங்கள் பணியைத் தொடர்வார்கள்.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1957710899898380416