யூமா வாசுகி மற்றும் லோகேஷ் ரகுராமன், இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்து.

15 June 2024

நீண்ட காலமாகத் தமிழ் நவீன இலக்கியத்தில் இயங்கிவருபவர் யூமா வாசுகி. அடிப்படையில் ஓவியராக இருந்து இவர் இயற்றிய கவிதைகளும், எழுதிய நாவல்களும் தமிழ்ப் பரப்பில் பரவலான வரவேற்பைப் பெற்றவை. மலையாளத்திலிருந்து சிறார் கதைகளை மொழிபெயர்த்துவந்த இவர், தனது நேரடி சிறுவர் கதைக்கொத்தான ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்கு, சாகித்ய அகாடெமியின் பால புரஸ்கார் விருது பெற்றிருக்கிறார். 

இவருக்கும், ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய யுவ புரஸ்கார் விருது பெற்றிருக்கும் இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்து.

#SahityaAkademi #BalSahityaPuraskar #YuvaPuraskar

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1802016874055524659

Facebook: https://www.facebook.com/share/p/sbjXerf4mZ6UMz1Q/

Recent video







Share this post