இளமை மாறாத உற்சாகத்துடன் திகழ்ந்த சிங்கீதம் சார் தனது நெடிய திரைப்பட அனுபவங்களையும், தரமான சினிமாக்கள் மீதான தனது பார்வையையும் அள்ளக்குறையாத அனுபவச்செறிவுடன் அளித்தார்.

27 March 2024

இன்றும் பொலிவு குன்றாமல் இருக்கும் மிகச்சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். 

அவரைக் கொண்டாடவும், கடந்த காலத்தின் இனிய தருணங்களை நினைவுகளில் மீட்டெடுக்கவும் ‘அபூர்வ சிங்கீதம்’ திரைப்பட விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். 

எங்களது @RKFI நிறுவனத்திற்காக சிங்கீதம் சார் இயக்கிய திரைப்படங்களில் இருந்து ராஜ பார்வை, புஷ்பக் (பேசும் படம்), அபூர்வ சகோதரர்கள், மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய 4 படங்களைத் தேர்ந்தெடுத்து திரையிட்டோம். 

திரையிடலுக்குப் பின் இயக்குனருடன் நானும், படத்தில் பங்காற்றிய கலைஞர்களும் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. இன்றைய தலைமுறை இயக்குனர்களும், கலைஞர்களும் உரையாடலில் ஆர்வத்துடன் பங்கேற்றுக்கொண்டனர். 

இளமை மாறாத உற்சாகத்துடன் திகழ்ந்த சிங்கீதம் சார் தனது நெடிய திரைப்பட அனுபவங்களையும், தரமான சினிமாக்கள் மீதான தனது பார்வையையும் அள்ளக்குறையாத அனுபவச்செறிவுடன் அளித்தார். 

அபூர்வ சிங்கீதம் ஓர் இனிய தொடக்கம். நன்மை மலரட்டும். 

#ApoorvaSingeetham

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1772957168712782192?s=20

Facebook: https://www.facebook.com/share/p/dXmkTgTjFJ1bHwvJ/?mibextid=qi2Omg


Recent video







Share this post