2026 சட்டமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டங்கள்.

11 September 2025

2026 சட்டமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டங்கள்

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டங்கள், நமது தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் வருகிற செப்டம்பர் 18, 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்தக் கலந்தாய்வில் கட்சியின் அனைத்து மண்டலங்களையும் சேர்ந்த மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் நமது தலைவர் அவர்கள் சந்திக்கவுள்ளார். ஆகவே தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! நாளை நமதே!

மண்டல வாரியான கலந்தாலோசனைக் கூட்ட விவரங்கள்:

தேதி ​நேரம் ​மண்டலம்
18-09-2025 (வியாழன்) ​காலை 10 மணி ​- சென்னை மண்டலம்

​    ​மாலை 4 மணி ​- காஞ்சி மண்டலம்

19-09-2025 (வெள்ளி) ​காலை 10 மணி ​- கோவை மண்டலம்

​மாலை 4 மணி ​- மதுரை மண்டலம்

20-09-2025 (சனி) ​காலை 10 மணி ​- நெல்லை மண்டலம்

​மாலை 4 மணி ​- திருச்சி மண்டலம்

21-09-2025 (ஞாயிறு) ​காலை 10 மணி ​- விழுப்புரம் மண்டலம்

​மாலை 4 மணி ​- சேலம் மண்டலம் &
​   புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம்

கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் இடம்:

முத்தமிழ்ப் பேரவை, T.N.ராஜரத்தினம் கலை அரங்கம்,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600 028.



A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு),  ​R. தங்கவேலு, 
துணைத் தலைவர்,  ​துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்.  ​மக்கள் நீதி மய்யம்.


Download PDF







Recent video







Share this post