மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை கேரள அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு! தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தல் மாநில செயலாளர் திருமதி. மூகாம்பிகா இரத்தினம் அறிக்கை.

7 February 2023

கேரளாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறுகால விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக இதை செயல்படுத்தியுள்ள கேரள அரசை மநீம பாராட்டுகிறது.

கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் செயல்படுத்திய இந்த திட்டத்தை, மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு கேரள அரசு விரிவுபடுத்தியுள்ளது. பெண்கள், சிறுமிகள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்க இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம்.

மாணவிகளின் நலன் கருதி தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதேபோல, கல்லூரி, பள்ளி மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைப் போக்க இதுபோன்ற முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தவும், தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசும், கல்வித் துறையும் முன்வர வேண்டும்.

- திருமதி. மூகாம்பிகா இரத்தினம்
மாநில செயலாளர் - மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி,
மக்கள் நீதி மய்யம்.




Recent video







Share this post