மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

7 November 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

07-11-2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (07-11-2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 70 பேர் உடல் உறுப்பு தானம் செய்தனர். நற்பணி இயக்கத்தின் சார்பாக, நலிவடைந்த 20 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு.A.G.மௌரியா IPS(Rtd), திரு.R.தங்கவேலு, பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A.,B.L., மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், டாக்டர். S.வைத்தீஸ்வரன், திரு. M.தர், திரு. S.B.அர்ஜுனர், திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு.R.லஷ்மன், செயற்குழு உறுப்பினர் திருமதி. சினேகா மோகன்தாஸ், மண்டலச் செயலாளர் 
திரு.T.மயில்வாகனன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

-ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF




Recent video







Share this post