போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்ற திமுக தலைவரும், முதல்வருமான திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

5 June 2024

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டிலும், பாண்டிச்சேரியிலும் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். 

தனது அன்பின் வெளிப்பாடாக வாழ்த்துக் கடிதம், புத்தகம், மலர்க்கொத்து ஆகியவற்றை முதல்வரிடம் கொடுத்து பாராட்டினார். 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன், திமுக தலைமை நிலையச் செயலாளர் திரு. பூச்சி முருகன், திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் ஆகியோர் இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தனர்.

@ikamalhaasan @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @PKSekarbabu @Dayanidhi_Maran @Arunachalam_Adv

#India #TamilNadu #Victory #KamalHaasan #MakkalNeedhiMaiam

Download PDF

Recent video







Share this post