அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாள் - மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

13 April 2025

அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாள் - மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

மானுட சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பதைச் சிந்தனை விதையாய்த் தூவியவர்; அத்துடன் நின்றுவிடாமல், அந்த சமநிலையின்மையைச் சந்தித்து எதிர்கொள்ளும் வழிவகைகளையும் சொன்னவர்; சொன்னவற்றைச் சட்டப்பூர்வமாக ஆக்கியும் தந்த பெருமகன் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர். அவரது பிறந்த நாள் இன்று.

சமநீதிக்குச் சவால் விடும் கூட்டம் முன்னெப்போதையும்விட வலுவடைந்து வருகிறது. வெறுப்புக்கும், பாகுபாட்டுக்கும் எதிராக நாம் எழ வேண்டிய காலமாக இது உள்ளது. இத்தருணத்தில் நமக்கான ஆயுதங்களையும் கேடயங்களையும் ஆக்கித்தந்த அண்ணலின் சொற்களை நெஞ்சில் ஏந்திக்கொள்ள சூளுரை எடுக்க வேண்டிய நாள் இது.

Download PDF



Recent video







Share this post