வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம்களில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத்தினர்.

17 November 2024

வணக்கம்.,

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலுடன், நேற்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமில் தமிழகம் முழுவதும், பல்வேறு வார்டுகளில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க வருகை தந்தவர்கள், மற்றும் அதன் தொடர்பான அனைத்துவித கோரிக்கைகளுக்கும், தேவையான, உரிய உதவிகளைச் செய்தார்கள்.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் வார்டு எண் 61, 108, 147 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில், மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைச் செயலாளர் திரு.சண்முக ராஜன், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் தணிகைவேலு, சென்னை மண்டல மாணவர் அணி அமைப்பாளர் திரு.B.சந்துரு, மாவட்டச் செயலாளர்கள் திரு.பாசில், திரு. வசந்த்சிங், மாவட்ட துணைச் செயலாளர் திரு.G.ராஜேஷ், ஆதிதிராவிடர் நல அணி மாவட்ட அமைப்பாளர் திரு. ஐயப்பன், நகரச் செயலாளர்கள் திரு.K.ராமு, திரு.M.மதிவாணன், வட்டச் செயலாளர்கள் திரு. ராஜேந்திரன், திரு.JL.ராஜகுமார், திரு.V.சுகுமார், கிளைச் செயலாளர்கள் திரு.A.கோவிந்தசாமி, திரு.R.பலராமன் உள்ளிட்ட மய்ய நிர்வாகிகள் மக்கள் பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

-ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF



Recent video







Share this post