பத்திரிகைச் செய்தி
(18/12/2025)
100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை குளறுபடியாக்கி, புதிய மசோதா கொண்டு வந்த, மக்கள் விரோத பா.ஜ.க அரசை கண்டித்து,
இந்திய தேசிய காங்கிரஸ் (தமிழ்நாடு) சார்பில், சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர்கள் திரு. அரவிந்ராஜ், திரு. ராகேஷ் ராஜசேகரன், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாநிலச் செயலாளர் திரு. அரவிந்ராஜ் அவர்கள் மநீம சார்பில் கண்டன உரையாற்றினார்.
இக்கண்டன ஆர்ப்பாடத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல அமைப்பாளர் திரு. திரு, ரூபலிங்கம், அரவிந்தன் ராம்குமார், மாவட்டச் செயலாளர்கள் திரு. J.அப்துல் முசாபர், திரு. V.உதயகுமார், திரு. B.கோவிந்தராஜ், திரு. K.சீனுவாசன், திரு. D.மாறன், திரு. சைதை J.கதிர், திரு.D.தேசிங்குராஜன், திரு.S.பாஸ்கர், திரு.A.தனபாலன், மாவட்ட அமைப்பாளர் திரு. சுவாதி குமார் ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
