மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில், 79-ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாட்டம்.

15 August 2025

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில், 79-ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாட்டம்.

15/08/2025

நமது தேசத்தின் 79-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம் இன்று நமது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது. கட்சி துணைத்தலைவர் திரு. A.G.மௌரியா IPS(Rtd) அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின பேருரையாற்றினார். அத்துடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி, குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

விழாவில், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. S.B.அர்ஜுனர், திரு. ராகேஷ் ராஜசேகரன், மாவட்ட, மாநகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post