நம்மவர் அவர்கள் களஆய்வு செய்த எண்ணூர் மற்றும் எர்ணாவூர் பகுதிகளில் நிவாரணப்பொருள் வழங்கும் பணியில் மக்கள் நீதி மய்யம்.

18 December 2023


நேற்று தலைவர் நம்மவர் அவர்கள் களஆய்வு செய்த, எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் மற்றும் எர்ணாவூர் பகுதிகளில் இன்று மக்கள் நீதி மய்யம் நிவாரணப்பொருள் வழங்கும் பணியில்.

நேற்று(17.12.2023) மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர் மற்றும் எர்ணாவூர் பகுதிகளை பார்வையிட்டு, அத்துடன் அந்தப்பகுதி மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்தார்.

இன்று (18.12.2023) அதன் தொடர்ச்சியாக, நம்மவரின் வழிகாட்டுதலின் பேரில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக பாதிப்புக்குள்ளான, அப்பகுதியில் நிவாரணப்பொருள்கள் வழங்கப்படுகிறது.

எண்ணூர் மற்றும் எர்ணாவூர் சார்ந்த எட்டு பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மாணவர் அணி மாநில செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன் ஒருங்கிணைப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் மேற்பார்வையில் ஊர் பொறுப்பாளர்கள் ஒத்துழைப்போடு நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணி நடைபெறுகிறது.

நிவாரணப்பொருட்கள் வழங்கும் இடங்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 
பெயர்கள்:

1) திருவீதி அம்மன் எர்ணாவூர்
திரு.S. D. மோகன்
மாவட்ட செயலாளர் 
(திருவொற்றியூர், மாதவரம்)

2) காட்டுக்குப்பம்
திரு. தேசிங்கு ராஜன்
மாவட்ட செயலாளர்
(கும்மிடிப்பூண்டி, பொன்னேரி)

3) நெட்டுக்குப்பம்
திருமதி. சினேகா மோகன்தாஸ்
மாவட்ட செயலாளர்
(சைதாப்பேட்டை, வேளச்சேரி)

4) முகத்துவாரக்குப்பம்
திரு. உதயகுமார்
மாவட்ட செயலாளர்
(பெரம்பூர், திரு. வி. க. நகர்)

5) பெரியகுப்பம்
திரு. வசந்த் சிங்
மாவட்ட செயலாளர்
(எழும்பூர், துறைமுகம்)

6) சிவன் படைவீதி
திரு. மாறன்
மாவட்ட செயலாளர்
(ராயபுரம், R. K. நகர்)

திரு. கோமகன்
மாவட்ட செயலாளர்
(கொளத்தூர், வில்லிவாக்கம்)

7) எண்ணூர் குப்பம்
திரு. சண்முக சுந்தரம்
மாவட்ட செயலாளர்
(அண்ணா நகர், விருகம்பாக்கம்)

8) தாளங்குப்பம்
திரு. பாசில்
மாவட்ட செயலாளர்
(மதுரவாயல், பூந்தமல்லி)

ஆ.அருணாச்சலம் MA., BL.,
பொதுச் செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.



Download PDF


Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1736747189500518431?t=IgK6Gt_mdmv1YwCItlgvew&s=19

Facebook: https://www.facebook.com/share/p/Tvsk8jyPg5vjAZMz/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C0_zL1LP9Ke/?igshid=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post