‘தேசியக் கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை’ - புத்தக வெளியீடு வாழ்த்து மடல்.

17 May 2025

‘தேசியக் கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை’ - புத்தக வெளியீடு வாழ்த்து மடல்.

‘தேசியக் கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை’ எனும் பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், அன்புக்குரிய இளவலுமான திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். அத்தோடு நில்லாமல் இந்தப் புத்தகத்தை அவரது சொந்தப் பதிப்பகமான அன்பில் பதிப்பகம் வழியாக வெளியிட்டு தமிழ் மக்களுக்கு உணர்வூட்டவும் முடிவு செய்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் நூல் வெளியீட்டு விழா சிறக்கவும், இந்தப் புத்தகம் தமிழ்நாட்டைத் தாண்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நான் மனதார வாழ்த்துகிறேன். 

கமல் ஹாசன்,
தலைவர் 
மக்கள் நீதி மய்யம்.

Download PDF

Recent video







Share this post