நாடாளுமன்றத் தேர்தல் 2024 தேர்தல்பணி ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

30 January 2024

உயிரே உறவே தமிழே!

வணக்கம்!

நடைபெற இருக்கும் 2024 பாராளுமன்றத் தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொண்டு பெருவெற்றியை ஈட்டுவதற்காக மக்கள் நீதி மய்யத்தின் மூத்த நிர்வாகிகளை உள்ளடக்கிய ‘தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு’ உருவாக்கப்பட்டுள்ளது. 

குழு உறுப்பினர்கள்:

திரு. A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு), துணைத் தலைவர் 
திரு. R. தங்கவேலு, துணைத் தலைவர்
திரு. ஆ. அருணாச்சலம் M.A., B.L., பொதுச் செயலாளர் 

எனது நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் இந்தக் குழுவிற்கு 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செயல்திட்டங்களை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும், பிற குழுக்களை அமைப்பதற்கும் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவிற்கு சிறப்பான ஒத்துழைப்பை நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நாளை நமதே!

-கமல் ஹாசன்
தலைவர்
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post