பத்திரிகைச் செய்தி.

9 March 2024

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களும் இன்று 09-03-2024 பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

அதன்படி, 2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் வருகிற 2025-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன், ‘எங்களுடைய தனிப்பட்ட நலனை விட தேசத்தின் நலனே முக்கியமானது’ என்பதால், திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறோம்.

இந்தச் சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மெளரியா, பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம், ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ், நிர்வாகக் குழு உறுப்பினர்களான திரு.அர்ஜூனர், திரு. மூர்த்தி, மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், சட்ட ஆலோசகர் திரு. எம்.வி. பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF



Recent video







Share this post