சென்னை மாநகராட்சியின் பகுதி சபை கூட்டத்தில் பங்கேற்ற மய்யத்தினர்!

25 January 2024

பல வருடங்களாக செயல்பாட்டிற்கு வராமல் இருந்த கிராமசபை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் தொடர் வலியுறுத்தலின் பேரில் செயல்பாட்டிற்கு வந்தது.

பஞ்சாயத்துகளில் கிராமசபை நடப்பதுபோல் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஏரியாசபை நடத்தவேண்டுமென நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. இறையன்பு அவர்களிடம் மனு அளித்திருந்தார்.


அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு வருடம் 4 முறை பகுதி சபை கூட்டங்கள் நடத்துவதாக அறிவித்தது.

அதன்படி இன்று சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டங்களில் நம்மவர் உத்தரவின்படி மக்கள் நீதி மய்ய மாநில நிர்வாகிகள் திரு. செந்தில் ஆறுமுகம், 
திரு. மயில்வாகனன், திரு. சண்முகராஜன், நிர்வாகிகள் திரு. சங்கர் ரவி, திரு. பாலமுருகன், திரு. முகிலன், திரு.N.மூர்த்தி மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

எப்போதுமே மக்கள் நலனே பெரிதென்று செயல்படும் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இன்னொரு, மக்களுக்கு பயன்தரும் முயற்சி இது என்பதில் பெருமை கொள்கிறோம்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post