நம்மவருடன், வி.சி.க தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு.

10 May 2024

இன்று (09.05.2024) மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், முனைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ரவிகுமார், துணைப் பொதுச்செயலாளர் திரு. வன்னியரசு மற்றும் தனது கட்சி நிர்வாகிகளோடு சந்தித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தலைவர் நம்மவர் அவர்கள், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட தனக்கும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட திரு. ரவிக்குமார் அவர்களுக்கும் ஆதரித்து பரப்புரை செய்தமைக்கு, திரு. திருமாவளவன் அவர்கள் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

அத்துடன், தற்போதைய அரசியல் மற்றும் தேர்தல் நிலவரம் பற்றி தலைவர் நம்மவர் அவர்களும், திரு.திருமாவளவன் அவர்களும் கலந்துரையாடினார்கள்.

இச்சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் அவர்கள் உடனிருந்தார்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post